மன்னார் பிரதான பாலத்தடியில் சில வருடங்களாக அமைக்கப்பட்டிருந்த இராணுவ சோதனைச் சாவடி கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் புதிதாக அமைக்கப்பட்டுள்ளமை குறித்து மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
எனினும், கொழும்பு- அத்துருகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவமே இதற்கான காரணம் என்று பாதுகாப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர்கள் மன்னாரிற்கு சென்று தலைமன்னார் ஊடாக இந்தியாவுக்கு தப்பிச் செல்ல உள்ளதாக புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளதன் காரணமாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.