Search
Close this search box.
பல ரயில் சேவைகள் ரத்து..

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று (09) நள்ளிரவு முதல் ரயில் நிலைய அதிபர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு காரணமாக பல அலுவலக புகையிரதங்கள் இரத்து செய்யப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தம் போராட்டம் சட்டவிரோதமானது, இதன் காரணமாக பணிக்கு வராத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென போக்குவரத்து அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Sharing is caring

More News