Search
Close this search box.
கடல் மார்க்கமாக பறவைகள் மற்றும் ஊர்வன கடத்தல்!

சட்டவிரோதமான முறையில் பறவைகள் மற்றும் ஊர்வனவற்றை கடல் வழியாக கடத்திய ஐந்து சந்தேக நபர்களை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பல நாள் மீன்பிடி படகைப் பயன்படுத்தி இவர்கள் இந்தக் கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும், குறித்த படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கடத்தல் தொடர்பில் கடற்படை புலனாய்வு பிரிவினரின் நீண்டகால விசாரணையின் பலனாக, சுரக்ஷா கப்பலினால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் தென்கடலில் பயணித்த இந்த பலநாள் மீன்பிடி படகு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, குறித்த பலநாள் மீன்ப்பிடி படகில் இருந்து  13 அரியவகை மலைப்பாம்புகள், கிளிகள், ஆமைகள், உடும்பு உள்ளிட்ட பறவைகள் மற்றும் ஊர்வன கண்டுபிடிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஐந்து சந்தேகநபர்கள் படகில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நீர்கொழும்பு மற்றும் கொச்சிக்கடையைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நீர்கொழும்பில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டு  கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கடற்படையினர் மேற்கொண்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

கண்டுபிடிக்கப்பட்ட பறவைகள் மற்றும் ஊர்வன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஹிக்கடுவை வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட ஐந்து மீனவர்களும், படகும் மேலதிக விசாரணைக்காக வன பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring

More News