ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (A.M.A.L. Rathnayakke) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“அரசியல் அமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல், ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர், மற்றும் இரண்டு மாதங்களுக்குள் ஒரு திகதியில் நடத்தப்பட வேண்டும்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) பதவிக்காலம், 2024 நவம்பர் 18ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
எனவே, ஒக்டோபர் 18ஆம் திகதிக்குள்ளான காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்.அதேவேளை, வேட்புமனுக்கள், வேட்பாளர்களிடமிருந்து 16 நாட்களுக்கு குறையாத மற்றும் 21 நாட்களுக்கு மிகாமல் ஒரு நாளில் ஏற்று கொள்ளப்படும்.
அதேவேளை, வேட்புமனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து 16 நாட்களுக்கு குறையாத மற்றும் 21 நாட்களுக்கு அதிகரிக்காமல் ஒரு நாளில் ஏற்று கொள்ளப்படும்.
அதற்குப் பிறகு, நான்கு அல்லது ஆறு வாரங்களுக்கு முன் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும்.
இந்நிலையில், தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளில், தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, பொலிஸ் மா அதிபர், தபால் மா அதிபர் மற்றும் அரச அச்சக அதிகாரி ஆகியோருடனான கூட்டத்திற்கு ஆணைக்குழு இன்று (09) அழைப்பு விடுத்துள்ளது.
இதன்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சீட்டுகள் மற்றும் பிற தொடர்புடைய ஆவணங்கள், தபால் மூலம் வாக்களிப்பு மற்றும் வாக்கு சீட்டுக்களை அச்சிடுவது குறித்து கலந்துரையாடப்படும்” என சுட்டிக்காட்டியுள்ளார்.