அனுராதபுரத்தில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 5 மணித்தியால நடவடிக்கையின் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கெபத்திகொல்லேவ, கிரிகெட்டுவெவ பிரதேசத்தில் தனியார் காணியில் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்த காட்டு யானை 5 மணித்தியால நடவடிக்கையின் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.
கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் காரியாலயத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யானையை மீட்டு பத்திரமாக காட்டுக்குள் விடுவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு இந்த காட்டு யானை கிணற்றில் விழுந்துள்ளது. கஹட்டகஸ்திகிலிய வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள், கெபத்திகொல்லேவ பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராமவாசிகள் சுமார் 40 அடி கிணற்றிற்குள் விழுந்த யானையை பேக்கோ இயந்திரம் மூலம் மீட்டுள்ளனர்.
அதன்பின், கிணற்றில் இருந்து வெளியே வந்த காட்டு யானை, கிட்டதட்ட 5 நிமிடங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கும்பிட்டுவிட்டு அமைதியாக வனப்பகுதிக்கு சென்றது.
சுமார் 12 அடி உயரம் கொண்ட இந்த காட்டு யானை தொடர்ந்து கிராமத்தை தாக்கி வருவதாக கிராம மக்கள் தெரிவித்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.