Search
Close this search box.
யாழ்ப்பாணத்தில் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல்.

யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

ஓட்டுமடம் பகுதியில் உள்ள மரக்காளை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை அத்துமீறி நுழைந்த கும்பலே வன்முறையில் ஈடுப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த உரிமையாளரின் மகன், யாழில் இயங்கிய வன்முறை கும்பலுடன் முன்னர் சேர்ந்து இயங்கிய நபர் எனவும், தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring

More News