Search
Close this search box.
15 இலட்சம் ரூபாவுக்கு ‘டீல்’ – வலம்புரிச் சங்குடன் வசமாக சிக்கிய இளைஞன்

புத்தளம் – மாரவில பகுதியில் 15 இலட்சம் ரூபா டீல் அடிப்படையில் விற்பனை செய்ய முற்பட்ட வலம்புரிச் சங்குடன் ஒருவர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாரவில பகுதியில் ஒருவர் வலம்புரிச் சங்கு வைத்திருப்பதாக மீரிகம விமானப்படைப் புலனாய்வுப் பிரிவருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய நேற்று பிற்பகல் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.

கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் மற்றும் புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் 15 இலட்சம் ரூபா ஒப்பந்தம் அடிப்படையில் குறித்த நபரிடம் வலம்புரிச்சங்கை வாங்கும் நோக்கில் சென்று அவரை கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்கு சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியென வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று மாலை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் புதன்கிழமை மாரவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Sharing is caring

More News