Search
Close this search box.
ஜனாதிபதிக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம்: பசில் ராஜபக்ச அறிவிப்பு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டைப் பற்றி நன்கு சிந்தித்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் அரசியல் வாழ்வில் 27 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு களுத்துறையில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எமது கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து எமக்கு கிடைத்த பலத்துடன் இந்த அரசாங்கத்தில் ஒரு கட்சியாக செயற்படும் போது எப்பொழுதும் அச்சமின்றி உங்களுக்கு உதவியுள்ளோம்.

அன்றைய தினம் ரோஹித அபேகுணவர்தன உட்பட எமது கட்சியில் உள்ள அனைவரும் இந்த நாட்டைக் காப்பாற்றும் திறன் உங்களிடமே இருக்கின்றது என்று தீர்மானித்தோம்.

இன்று வரை அந்த ஆதரவை நாங்கள் உண்மையாக வழங்கி வருகின்றோம். அந்த ஆதரவு தொடரும். இது நாட்டுக்காக எடுத்த முடிவு.

இந்த நாட்டு மக்களை நீங்கள் பாதுகாக்கும் வரை உங்களுக்கு எல்லா பலத்தையும் தருவோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் கலந்துகொண்டனர்.

Sharing is caring

More News