முல்லைத்தீவு ஐயங்கன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியை அண்மித்துள்ள பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று(05) மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான அக்கராயன் குளத்தின் பின் பகுதியிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக ஐயங்கன் குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.