Search
Close this search box.
ஒற்றை ஆட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்க எத்தனிக்கும் ரணில்.

ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ஜனாதிபதி ரணில் முன்னெடுத்து வருகிறார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதி ரணில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக சலுகைகளுக்கு விலைபோகக்கூடியவர்களை வைத்துக்கொண்டு பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி குறித்த உண்மைக்கு புறம்பான பிரசாரங்களை இந்திய மேற்குத்தரப்புக்கள் தெரிவித்து வருகிறார்.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை எந்த வகையிலும் நம்பிக்கை தரவில்லை, நாட்டை பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி கொண்டு செல்வதாக கதைகளை சொல்லி மக்களை ஏமாற்றி மீண்டும் ஒரு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்த நாட்டில் 75 வருடமாக காணப்படும் இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். மேலும் ஒற்றையாட்சிக்குள் தமிழ் அரசியலை முடக்கும் செயற்பாடுகளை ரணில் முன்னெடுத்து வருகிறார்” என தெரிவித்தார்.

Sharing is caring

More News