இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்தவர் பிரதாபன் தர்மலிங்கம் (வயது 47) இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுற்றுச்சூழல் மீதும் மரங்கள் வளர்ப்பதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர் ஆவார்.
இவர் பூமி வெப்பமயமாவதை தடுக்கவும், மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த ஆண்டு ஜுலை மாதம் தமிழகம் முழுவதும் சைக்கிளில் 3000 கிலோமீட்டர் சுற்றுப்பயணம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மரங்கள் வளர்ப்பது குறித்தும், பெண் பிள்ளைகள் பெண்கள் வன்கொடுமையில் இருந்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி இந்தியா முழுவதும் சுமார் 15 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தை 120 நாட்களில் சைக்கிளில் சுற்றி வர முடிவு செய்து, கடந்த ஜுலை 24 தேதி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் துவக்கி வைத்து அவரது பயணம் வெற்றி பெற வாழ்த்துகள் தெரிவித்தார்.
பின்னர் பிரதாப தர்மலிங்கம் பார் கவுன்சிலில் இருந்து தனது பயணத்தை துவக்கினார்.
இந்த நிலையில் கடந்த ஆறு நாட்களாக தனது சைக்கிள் பயணத்தில் அவர் இன்று தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சென்றார்.
அங்குள்ள சார்மினார் சதுக்கம் அருகே சென்றபோது அங்குள்ள இளைஞர்கள் இவரின் விழிப்புணர்வு பயணத்தை அறிந்து அவருக்கு வரவேற்றனர்.
மேலும் அவருக்கு சால்வை அணிவித்து அவரை பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.