பொலிஸ் திணைக்களத்திற்காக நெதர்லாந்தில் இருந்து 5 கோடி 80 இலட்சம் ரூபா பெறுமதியான 35 நாய்கள் இன்று(05) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நாய்களில் 13 பெல்ஜியன் மாலினோயிஸ் நாய்கள், 12 ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்கள் மற்றும் 10 ஆங்கில ஸ்பானியல் நாய்கள் அடங்குகின்றன.
அவை நெதர்லாந்தில் உள்ள K.-10 Working Dog என்ற தனியார் விலங்கு பண்ணையில் இருந்து வாங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட நாய்களில் 21 பெண் நாய்களும், 14 ஆண் நாய்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நாய்களில் இரண்டு ஆங்கில ஸ்பானியல் பெண்கள் ஏற்கனவே கர்ப்பமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நாய்கள் விமான நிலையத்தின் விமான சரக்கு முனையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலைய விலங்குகள் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள கால்நடை வைத்திய அதிகாரிகளினால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், நாய்களின் பயிற்சியாளர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.