தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் குறித்து அரசியலமைப்பின் பிரகாரம் விளக்கமளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை தொழிலதிபர் சி.டி.லெனாவாவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதித் தேர்தல் திகதி குறித்து உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது நிர்ணயிக்கப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவொன்றை பிறப்பிக்குமாறும் மனுவில் மேலும் கோரப்பட்டுள்ளது.