Search
Close this search box.
யாழில் சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் பொலிஸார் விசேட சோதனை

யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில், பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இத்தாலியைச் சேர்ந்த பெண்ணொருவர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பி விவாகரத்துக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது, அவர் ஏற்கனவே விவாகரத்துப் பெற்றுள்ளார் என்று தரவுகள் வெளிக்காட்டியுள்ளன.

அந்தப் பெண் அதுவரை விவாகரத்துக்கு விண்ணப்பிக்காத நிலையில், இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், பொலிஸ் விசாரணைகளில், உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவர் கனிஷ்ட சட்டத்தரணிகள் மூலமாக ஆள்மாறாட்டம் செய்து , மேற்படி தம்பதியர்கள் விவாகரத்துப் பெற்றுக்கொள்வதாக நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இது தொடர்பில் குறித்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சாவகச்சேரி நீதிமன்றத்தில் பொலிஸார் அனுமதி பெற்றதையடுத்தே இந்தச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Sharing is caring

More News