பிரித்தானிய மன்னரின் தங்கையான இளவரசி ஆன் (Princess Anne) கனடாவில் நடைபெறவிருந்த தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டுள்ளார்.
போரின்போது வட பிரான்சில் உயிரிழந்த கனேடிய வீரர் ஒருவரின் உடலை கனடாவுக்குக் கொண்டுவரும் அந்த நிகழ்ச்சியில் இளவரசி ஆன் கலந்துகொள்ளவேண்டியிருந்தது.
இளவரசி குதிரை ஒன்றினால் தாக்கப்பட்டதால் காயமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி, இளவரசி ஆன் ஓய்வெடுக்க வேண்டியிருப்பதால் அவர் கலந்துகொள்ளவிருந்த சில நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.
இதயையடுத்து அவரால் கனடா செல்ல முடியாத நிலைமை ஏற்படவே, அவர் கனடா மக்களுக்கு அனுப்பிய செய்தியை, கவர்னர் ஜெனரல் வாசித்துள்ளார்.
குறித்த செய்தியில், 2016ஆம் ஆண்டு தான் கனடாவில் தேசிய போர் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதை நினவுகூர்ந்துள்ள இளவரசி ஆன், இம்முறை தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாததற்காக வருத்தம் வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.