பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் இந்த விமானம் விபத்துக்குள்ளானதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்தும் ஸ்தம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், விமானம் விபத்துக்குள்ளானதன் காரணம் என்ன என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.