Search
Close this search box.
மன்னார்-மடுமாதா நினைவுத் தபால் முத்திரை வெளியீடு

மன்னார், மடுமாதா திருச்சொரூபத்திற்கு மணிமுடி சூடிய நூற்றாண்டு விழாவையொட்டி நினைவுத் தபால் முத்திரை நேற்று வெளியிடப்பட்டது.

மன்னார், மடு அன்னையின் ஆடி மாதம் திருவிழா இன்று ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் மடு அன்னை அரசியாக முடி சூட்டப் பட்டதன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திரு உருவம் பொறிக்கப்பட்ட முத்திரை நேற்று மடு திருத்தலத்தில் வெளியிடப்பட்டது.

மடு திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எஸ். என்ரனி ஞானப்பிரகாசம் அடிகளாரின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

தபால் மா அதிபர் ரூவன் சத்குமாரவினால் மடு அன்னையின் திருவுருவம் பொறிக்கப்பட்ட இந்த விசேட முத்திரை, மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தபால் திணைக்கள அதிகாரிகள், கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் சத்துரி பிந்து மற்றும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Sharing is caring

More News