Search
Close this search box.
இன்று முதல் இலங்கையில் ஒக்டேன் 100 பெட்ரோல் விற்பனைக்கு

லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் (LIOC) இன்று (02) முதல் ஒக்டேன் 100 பெட்ரோலை தனது பல விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்ய ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் XP100 இன் உத்தியோகபூர்வ அறிமுகம் இன்று பிற்பகல் 2.45 மணிக்கு Ninewells LANKA IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கௌரவ எரிபொருள் மற்றும் எரிசக்தி அமைச்சர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் கௌரவ LIOC தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

அதன் படி உலகில் இவ்வகை பெட்ரோலை விற்பனை செய்யும் எட்டாவது நாடாக இலங்கை மாறும்.

நவீன வாகனங்களில் பயன்படுத்துவதற்கு உகந்த இவ்வகை எரிபொருளின் மூலம் அதிக மைலேஜுடன் சீரான ஓட்டம் மற்றும் அதிக எஞ்சின் செயல்திறனை அனுபவிக்க முடியும் என லங்கா இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது.

இந்த வகை பெட்ரோல் ஒரு லீட்டர் 793 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது

Sharing is caring

More News