மட்டக்களப்பு சிறைச்சாலையில் 8 கிராம் ஜஸ்போதை பொருளுடன் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் திங்கட்கிழமை (01) இரவு கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சிறைச்சாலையில் இரவு கடமையில் இருந்த சிறைச்சாலை உத்தியோகத்தரை ஜெயிலர் சோதனையிட்ட போது அவரிடமிருந்து 8 கிராம் ஜஸ்போதை பொருளை மீட்டதுடன் அவரை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் அனுராதபுரத்தைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.