Search
Close this search box.
யாழில் உணவகத்திற்கு சீல் ; 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிப்பு !

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்க உத்தரவிட்ட நீதிமன்று, உணவகத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்துள்ளது.

யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன் போது, பொது சுகாதார பரிசோதகர்களால் கடந்த முறை அறிவுறுத்தப்பட்ட அறிவுறுத்தல்களை உதாசீனம் செய்து திருத்த வேலைகளை செய்யாதமை, தொடர்ந்து சுகாதார சீர்கெட்டுடன் உணவகத்தினை நடாத்தி சென்றமை உள்ளிட்டவற்றை கண்டறிந்த பொது சுகாதார பரிசோதகர்கள் உணவக உரிமையாளருக்கு எதிராக யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தனர்.

குறித்த வழக்கு நேற்று திங்கட்கிழமை (01) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளை உரிமையாளர் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து, திருத்த வேலைகள் முடிவடையும் வரையில் உணவகத்தை சீல் வைத்து மூட உத்தரவிட்ட மன்று, 90 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதித்தது.

Sharing is caring

More News