மறைந்த தமிழ் தேசிய தலைமகனாக போற்றப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனுக்கு (R.Sampanthan) அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று (01) தமிழரசுக்கட்சின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழரசுக்கட்சின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் ஏற்பாட்டில் களுவாஞ்சிகுடியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டதுடன் அஞ்சலி பதாகையும் கட்டப்பட்டது.