வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றவர் வீதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் வீதி சந்திப் பகுதியில் சனிக்கிழமை (29) குறித்த சடலம் மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வவுனியா, ஆச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த லியோசியஸ் டெல்சன் என்பவர் வைத்தியசாலையில் ஊசி போடுவதற்கு பயந்து வைத்தியசாலையிலிருந்து விடுகை பெறாது இரவு தப்பி வீடு நோக்கிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் வவுனியா, கோவில்புதுக்குளம், ராணிமில் சந்தியில் மரணமடைந்த நிலையில் சடலம் இருப்பதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து அங்கு செவன்ற பொலிசார் அச் சடலத்தை மீட்டனர். வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தர்.
வீதியால் சென்ற வாகனம் குறித்த நபர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் இதன் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்தும் வவுனியா பொலிசார் மற்றும் போக்குவரத்து பொலிசார் ஆகியோர் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்