இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் இன்று (1) திங்கட்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வேளையிலேயே 25 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் 4 படகுகளையும் இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைதான 25 இந்திய மீனவர்களும் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் சொல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.