கேகாலை – பமுனுகம பிரதேசத்தில் மாணிக்கக்கல் வியாபாரி ஒருவரை இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரி அச்சுறுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் வசிக்கும் பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த கடுவெல முத்து விடுத்த அச்சுறுத்தலை அடுத்து அவரது உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக லக்கல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உஸ்வதகேயாவ பமுனுகம பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவரின் வங்கிக் கணக்கில் 650,000 ரூபா பணத்தினை கப்பட் கோரப்பட்ட பணத்தின் முற்பணமாக வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் கடந்த 26 ஆம் திகதி லக்கல பொலிஸில் வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, கடுவெல முத்து மாணிக்கக்கல் வியாபாரிக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளதுடன், கப்பம் தொகையை பமுனுகமவில் வசிக்கும் தனது உதவியாளர் வங்கிக் கணக்கில் வரவு வைக்குமாறு கோரியுள்ளார்.
குறித்த பெண் 2021 ஆம் ஆண்டு டுபாய் சென்று கடுவெல முத்துவுடன் ஒன்றாக வாழ்ந்து 2023 ஆம் ஆண்டு இறுதியில் இலங்கை திரும்பியுள்ளமையும் தெரியவந்துள்ளது.
மாத்தளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் ரோஹன கமகே, லக்கல பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தம்மிக்க பத்மராஜா, குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் சமிந்த, உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ, பொலிஸ் சார்ஜன்ட்கள் (14751) குமாரசிங்க, (21662) ரஞ்சித், பொலிஸ் கான்ஸ்டபிள் (87 பொலிஸ் கான்ஸ்டபிள்) ஆகியோர் தலைமையில் இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய, டுபாயில் வசிக்கும் பிரதான சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், கைது செய்யப்பட்ட பெண் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.