ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எமது கட்சியின் அபிலாஷை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
மாத்தறையில் நேற்று இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரினதும் அபிலாஷை ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதேயாகும்,
மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் அதற்கு ஆதரவளிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்