சீனா மற்றும் அதன் தன்னாட்சி பிராந்தியங்களான ஹொங்கொங் , மக்காவோ ஆகிய பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்கும்படி தாய்வான் நாட்டினருக்கு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தாய்வான் நாட்டைச் சேர்ந்த இலட்சக்கணக்கானோர் சீனாவில் வசித்து வரும் நிலையில் இரு நாடுகள் இடையே தினமும் நேரடி விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்தநிலையில் தைவான் அரசின் இந்த அறிவிப்பு அங்குள்ள மக்களுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்து தாய்வான் 1949-ம் ஆண்டு தனிநாடாக பிரிந்தது. ஆனால் சமீப காலமாக தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைத்துக் கொள்ள சீனா முயற்சிக்கிறது.
மேலும் தாய்வானுடன் வேறு எந்த நாடுகளும் தூதரக உறவு வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கிடையே தைவான் எல்லையில் போர் விமானங்கள் மற்றும் கப்பலை அனுப்பி சீனா பதற்றத்தை ஏற்படுத்துகின்றது.
மேலும் தைவான் ஜனநாயகத்தை ஆதரித்து வருபவர்களை தூக்கிலிடுமாறு வலியுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.