எல்லைத்தாண்டி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை கைதுசெய்ய முற்பட்ட கடற்படை சிப்பாய் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இலங்கை தனது கவலையை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த திங்கட்கிழமை இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டதாகக் கூறி 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அத்துடன், அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
எவ்வாறாயினும், இந்த கைது நடவடிக்கையின் போது இலங்கை கடற்படையின் சிப்பாய் ஒருவர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கை தனது எதிர்ப்பை இந்தியாவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சின் தெற்காசிய பணிப்பாளர் நாயகம் நிலுக கதுருகமுவ, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்றாம் நிலை அதிகாரி ஒருவரை அழைத்து கவலைகளை வெளிப்படுத்தியதாக தகவலறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.