Search
Close this search box.
இலங்கையில் ஆசிய அபிவிருத்தி வங்கியினால் பயன் பெறப்போகும் தரப்பினர்!

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அபிவிருத்திக்கு எதிர்காலத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி (Asian Development Bank) ஆதரவளிக்குமென அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபோமி கடோனோ (Takafumi Kadono) தெரிவித்துள்ளார்.

அதேநேரம், நுண்நிதி துறையை வலுப்படுத்துவதிலும் ஆசிய அபிவிருத்தி வங்கி அதிக கவனம் செலுத்துமென டக்காஃபோமி கடோனோ கூறியுள்ளார்.

இலங்கையில் அண்மையில் அமைக்கப்பட்ட தேசிய கடன் உத்தரவாத நிறுவனத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது தொடர்பில் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆராய்ந்து வருவதாக அந்த வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் டக்காஃபோமி கடோனோ சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 100 மில்லியின் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்திருந்ததாகவும் குறித்த நிதி உதவி சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவன உரிமையாளர்கள் பல நெருக்கடிகளை எதிர்நோக்குவது இணங்காணப்பட்டுள்ளதாகவும் இதனடிப்படையில் அவர்களுக்கு ஆதரவு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், குறித்த நிறுவனங்களில் உள்ள தலைமை அதிகாரி உள்ளிட்ட ஊழியர்களுக்கு தேவையான அறிவுசார் உதவிகளையும் வழங்க எதிர்ப்பார்த்துள்ளதாக டக்காஃபோமி கடோனோ தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள ஏனைய நிதி நிறுவனங்களும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Sharing is caring

More News