2011 UL21’என்று பெயரிடப்பட்டுள்ள சிறுகோள் ஒன்று பூமிக்கு மிக அருகில் வருவதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த சிறுகோள் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரும். 1.1 விட்டம் மற்றும் 2.4மைல் வரையில் இருக்கும்.
இது பூமியின் அருகிலிருக்கும் ஏனைய சிறுகோள்களைப் பார்க்கிலும் அளவில் சற்று பெரியது.
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர் இனத்தின் அழிவுக்கு காரணமாக இருந்த சிறுகோளைப் பார்க்கிலும் இது 5 மடங்கு சிறியது.
அளவில் சிறிதாக இருந்தாலுமே இது பாரியளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதால் அபாயத்துக்கு சாத்தியமானது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த சிறுகோள், காலநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும், மேலும் விண்வெளியில் குப்பைகளை வெளியிடும் அளவுக்கு ஆபத்தானது என்று விஞ்ஞானிகள கூறுகின்றனர்.