Search
Close this search box.
சீனாவிற்கு விஐயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ…!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சீனாவிற்கு விஐயம் மேற்கொண்டுள்ளார்

பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் அவர் சென்றுள்ளார்

அவர் அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங் மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன்  இலங்கைக்கு நன்மை பயக்கும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார் என்றும்,

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதிப்பார் மற்றும் சீனா மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி அளித்த உதவிக்கு தனது நன்றியைத் அவர் அங்கு வெளிபடுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Sharing is caring

More News