Search
Close this search box.
நிவித்திகலையில் துப்பாக்கிச் சூடு…!

நிவித்திகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பாதகட பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திக்கோவிட்ட வத்த, பாதகட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய திருமணமான நபரொருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தின் போது இவர் உறவினரொருவருடன் வீட்டு முற்றத்தில் அமர்ந்திருந்த போது அங்குச் சென்ற இனந்தெரியாத நபரொருவர் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிசென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபரின் காலில் காயம் ஏற்பட்டுள்ள நிலையில் நிவித்திகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நிவித்திகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News