Search
Close this search box.
நிலவின் மண்,பாறை மாதிரிகளோடு பூமியை வந்தடைந்தது சாங் இ-6 விண்கலம்

சீனாவின் சாங் இ-6 என்கின்ற விண்கலம் நிலவின் தென் துருவத்திலிருந்து மண் மற்றும் பாறையின மாதிரிகளை சேகரிப்பதற்காக அனுப்பப்பட்டது.

கடந்த 2ஆம் திகதியன்று இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.

இந்த விண்கலம் எய்ட்கென் படுகையில் தரையிறங்கி அங்கே இயந்திரக் கை மற்றும் துளையிடும் கருவியின் மூலம் நிலவின் மண், பாறையின் மாதிரிகளை சேகரித்தது. அத்துடன் நிலவின் மேற்பரப்பு புகைப்படங்கள் சிலவற்றையும் பூமிக்கு அனுப்பியது.

இந்நிலையில் தற்போது சாங் இ-6 விண்கலம் மங்கோலியாவிலுள்ள பாலைவனத்தில் தரையிறங்கியுள்ளது.

விண்கலத்திலிருந்த நிலவு மாதிரிகளை ஆய்வு கூடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர் விஞ்ஞானிகள்.

இதுகுறித்து, விஞ்ஞானிகள் கூறுகையில், “கிரகங்களின் உருவாக்கம் மற்றும் அதன் தன்மை குறித்தும் அறிய இந்த மண் துகள்கள் நிச்சயம் பயன்படும். இந்த வெற்றியானது அனைத்து மனித குலத்துக்கும் சொந்தம்”எனக் கூறியுள்ளனர்.

இத் திட்டத்தில் பங்கேற்ற விஞ்ஞானிகள் அனைவருக்கும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News