2024 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் அரசாங்க பொதுக்கடன் அளவு 100 பில்லியன் டொலர்களை தாண்டியுள்ளது.
கடன் தொகை சுமார் 4 பில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கை நிதியமைச்சின் அறிக்கை தொடர்பிலும் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
உண்மையிலேயே, பொதுக்கடன் அளவு அதிகரித்து விட்டதா எவ்வாறு அதிகரித்தது என்ற கேள்வி பொருண்மிய அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளன.
”2023 இறுதியில் பொதுத்துறை கடன் = 96,170 மில்லியன் அமெரிக்க டொலர்
2024 மார்ச் மாத இறுதியில் பொதுத்துறை கடன் = 100,184 மில்லியன் அமெரிக்க டொலர்
2024 முதல் காலாண்டில் கடன் அதிகரிப்பு = 4,014 மில்லியன் அமெரிக்க டொலர்”
மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் நிதி அமைச்சு மூலம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நான்கு மாத காலப்பகுதிக்குள் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் பொதுக்கடன் அளவு அதிகரித்துள்ளது.
அப்படியெனில், குறித்த காலப்பகுதியில் புதிதாக கடன் தொகைப் பெற்ப்பட்டதா என்று ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது.
எனினும், 2022 இல் இலங்கைத்தீவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடனாக வழங்கயிருந்து.
2019 ஆம் ஆண்டு தொடக்கம் காணப்பட்ட வரவு செலவு திட்ட பற்றாக்குறையுடன் டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியும் அதிகரித்தமையால் இந்த கடன் தொகை நிலையாக காணப்பட்டு வருவதாக நிதி அமைச்சின் அறிக்கை மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.
பொதுக்கடன் என்பது வெளிநாட்டு கடன் மட்டுமல்ல. அவற்றில் பெரும்பாலானவை உள்நாட்டு வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன்களாகும். கொழும்பில் உள்ள வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்தும் பிரத்தியேகமாகக் கடன்கள் பெறப்படுகின்றன.
ஆகவே உள்ளூர் கடன்களில் சிறிய தொகையைத் தவிர, மற்ற கடன்கள் வெளிநாட்டு கடன்கள்.
வெளிநாடுகளிடம் இருந்து நேரடியாகப் பெறப்பட்ட கடன்களில் பெரும்பாலும் டொலர், யென், யூரோ அல்லது SDR (சர்வதேச நாணய நிதிய நாணயம்) போன்ற வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்படும் கடன்களாகும்.
இவ்வாறு, வெவ்வேறு நாணய அலகுகளில் பெறப்பட்ட அனைத்து கடன்களும் எளிதாக ஒப்பிடும் நோக்கில் அமெரிக்க டொலர்களில் மேலே உள்ள அட்டவணையில் வழங்கப்படுகின்றன. ஆனால் இந்த கடன்கள் அனைத்தும் டொலர்களால் பெறப்பட்ட கடன்கள் அல்ல.
இலங்கை வரலாற்றில் டொலர் ஒன்றின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. அதனால், ரூபாய் கடன்களின் டொலர் மதிப்பு குறைந்து, கடன்கள் குறைவாகக் காணப்பட்டன. டொலரின் விலை வீழ்ச்சி என்பது பொதுவாக இலங்கையில் நடைபெறாத ஒரு விடயம் ஆகும்.
எவ்வாறாயினும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், ஒரு டொலரின் விலை 323.92 ரூபாவிலிருந்து 301.17 ரூபாவாக குறைந்துள்ளது.
இதன்போது, ரூபாய் கடன்களின் டொலர் மதிப்பு அதிகரிக்கிறது.
அதேநேரம் இலங்கை இறக்குமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருப்பதால் சர்வதேச சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்யும்போது டொலர் பெறுமதி பயன்படுத்தப்படுகின்றது.
இதன் காரணமாக இலங்கையின் சேமிப்புக் குறைவடைந்து கடன் அதிகரிக்கும் நிலையும் ரூபாவின் பெறுமதி அதிகரித்தாலும் அது இலங்கைப் பொருளாதார வளர்ச்சியில் பாரிய தாக்கத்தைச் செலுத்துவதில்லை என்பதும் அவதானிக்கப்பட வேண்டிய பிரதான காரணியாகும்.
எவ்வாறாயினும், தற்போது இலங்கையில் அரசாங்க செலவுகள் அதன் வருவாயை விடவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.