ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றும் உரை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ஆருடம் வெளியிட்டுள்ளார்.
நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டதாக ஜனாதிபதி இன்றைய தினம் நாட்டு மக்களிடம் கூறுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு நாடு வங்குரோத்திலிருந்து மீண்டதாக ஜனாதிபதி கூற முடியாது என சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு வணிகக் கடன்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சஜித் தெரிவித்துள்ளார்.
கடன்களை மீளச் செலுத்தக்கூடிய இயலுமை கிடைத்தால் மகிழ்ச்சி அடைய முடியும் எனவும், அந்த நிலைமை குறித்து சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்கள் அறிவிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வங்குரோத்து நிலைமை தெடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு நாட்டின் நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றிற்கு முடியாது என சஜித் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.