Search
Close this search box.
ஒரு கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஆசிரியை ஒருவர் கைது

அநுராதபுரம் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் பண்டிகையை இலக்காகக் கொண்டு அனுராதபுரத்திற்கு வரும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விநியோக நடவடிக்கைகாக தம்பதியினர் தயாராக இருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண் ஆசிரியை வாரியபொல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவருடன் கைது செய்யப்பட்ட நபர் சுற்றுலாத்தளம் ஒன்றில் பணிப்புறியம் 28 வயதுடையவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தம்பதியினர் போதைப்பொருள் நடவடிக்கைகளை கடந்த ஒரு ஆண்டாக முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

தம்பதியினர் கைது செய்யப்பட்ட போது, ​​குறித்த பெண்ணிடம் இருந்து 40 கிராம் ஹெரோயினும், அவரது கணவரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் குருநாகல் பகுதியில் போதைப்பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து மொத்த ஹெரோயின் போதைப்பொருளை கொள்வனவு செய்து அநுராதபுரம் மற்றும் அருகில் உள்ள பல்வேறு இடங்களில் சில்லறை விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Sharing is caring

More News