வவுனியா ஓமந்தை பாலமோட்டை பிரதேசத்தில் இன்று (24) பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,
“சட்டவிரோதமான முறையில் மரக்கடத்தல் மேற்கொள்ளப்படுகிறது” என, பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹப் ரகர வாகனத்தை சோதனைக்குட்படுத்த முற்படும்போது அவ் வாகனம் தப்பிச் செல்ல முயன்றது.
இதனையடுத்து பொலிஸாரால் அவ் வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போது வாகனத்தில் இருந்த கடத்தல்காரர்கள் வாகனத்தை விட்டு தப்பி ஓடிச்சென்றுள்ளனர்.
இதன்போது பெரிய அளவிலான 17 மரக் கட்டைகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.