Search
Close this search box.
பெருமளவில் இலாபம் ஈட்டும் தனியார் வகுப்புக்கள் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையில்  தனியார் வகுப்புக்களின் மூலமான வருடாந்த புரள்வு சுமார் 200 பில்லியன் ரூபா என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவு பேராசிரியர் வசந்த அதுகோரள தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தனியார் வகுப்புக்கள் தொடர்பில் உடன் ஒழுங்குபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் ஒட்டுமொத்த பாடசாலைக் கட்டமைப்பினையும் பின்தள்ளி தனியார் வகுப்பு கலாசாரம் தலைதூக்கியுள்ளது.

தனியார் வகுப்புக்களில் தகுதியற்றவர்களும் வகுப்பு நடாத்துகின்றனர்.

இது ஒர் பாரதூரமான நிலைமை, தனியார் வகுப்புகள் ஒழுங்குபடுத்தப்படாவிட்டால் அது மாணவர்களை மோசமாக பாதிக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Sharing is caring

More News