நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை நாளையதினம்(25) காலை 8.30 மணிக்கு தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நிலையான சமாதானத்திற்காக நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் 15 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை வாழ் இளைஞர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளை உள்ளடக்கி குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினர் தெரிவித்துள்ளனர்.