அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையின் குறைபாடுகளை நீக்கி, சமமான கல்வியை உறுதி செய்யும் வகையில், வெளிப்படையான புதிய சுற்றறிக்கையை இன்று (24) வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த சுற்றறிக்கைக்கு கடந்த 20ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், பிறப்புச் சான்றிதழ் இல்லாத பிள்ளைகள் பாதிக்கப்படாத வகையில் ஏற்றுக்கொள்ளக்கூடிய வயதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால் அவர்களை உள்வாங்க வேண்டும் என புதிய சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரிவு 2.1, சில ஏற்றுக்கொள்ளக்கூடிய சான்றுகளின்படி, பிறப்புச் சான்றிதழ் இல்லாத மற்றும் 5 வயதுக்கு குறைவான வயதுடைய மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அனுமான வயது பிள்ளைகள் நியாயமற்றதாகவோ அல்லது பாரபட்சமாகவோ நடத்தப்படக்கூடாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பிரிவு 6.2.5ன் படி செய்யப்பட்ட திருத்தத்தில், ஒருவரின் சொந்தக் குழந்தை அல்லது பேரக்குழந்தை, பேத்தி அல்லது மனைவியின் சகோதர சகோதரிகளின் குழந்தைகள், மனைவியின் சகோதர சகோதரிகளின் குழந்தைகளாக திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் நிலவிய சுற்றறிக்கைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, அங்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மேலும் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், பல்வேறு யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்ட முதலாம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான புதிய சுற்று நிருபம் இன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, விண்ணப்பதாரர்கள் முறைகேடுகள் செய்ய முடியாத வகையில் புதிய சுற்றறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.