Search
Close this search box.
இந்திய வெளிவிவகார அமைச்சருடன் இரகசிய சந்திப்பு நடத்திய பசில்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் அரசாங்கத் தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட இருதரப்பு கலந்துரையாடல்களுக்கு மேலதிகமாக,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஸ்தாபகர் பசில் ராசபக்ச மற்றும், நாமல் ராசபக்ச உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தியா நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் அனைத்தும், எந்த அரசாங்கத்தாலும் தடம் புரளாமல் இருப்பது முக்கியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ராஜபக்ச தரப்பிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிற்கு நிதியளிக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்கள் போன்ற இந்தியா நிதியுதவியில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் எந்த அரசாங்கத்தாலும் தடம் புரளாமல் இருப்பது முக்கியம் என இலங்கை விஜயத்தின்போது தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

அவரது சந்திப்புகளில், சூரியசக்தி திட்டங்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் வரும் எந்தவொரு அரசாங்கத்தின் கீழும் இந்தத் திட்டங்கள் தொடர்வதை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்ட பெட்ரோலியக் குழாய்த்திட்டத்தைப் பற்றிக் குறிப்பிடுகையில், இந்தியா நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் இதேபோன்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது என்றும், அத்தகைய இணைப்பின் ஒரு பகுதியாக இலங்கை இருக்க விரும்புவதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

Sharing is caring

More News