நெடுந்தீவில் அடித்துக் கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞரின் சடலத்துடன் நெடுந்தீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெடுந்தீவு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 23 வயதான ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சகல சந்தேகநபர்களையும் கைது செய்யுமாறு வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை, நெடுந்தீவு இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காயங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.