2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குரிய (GCE A/L Exam) விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) தெரிவித்துள்ளது.
இதன்படி உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் (ஜீன் 20) முதல் நிகழ்நிலையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஜீலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) அறிவித்துள்ளார்.
விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.doenets.lk) அல்லது நிகழ்நிலை பரீட்சை இணையத்தளத்தில் நுழைவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்திற்கான உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடாத்துவதற்கான ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.