இலங்கை எதிர்நோக்கி வரும் பொருளாதார நெருக்கடியிலிருந்து விரைவில் மீளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2 வருடங்களுக்கு மேலாக வங்குரோத்து நிலையிலிருக்கும் இலங்கையின் இந்த நிலை முடிவுக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை திவால் நிலையில் இருந்து விடுவிப்பதாக சர்வதேச நாணய நிதியத்தினால் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதியன்று, இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமையால் திவால் அடைந்த நாடாக அறிவிக்கப்பட்டது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..