Search
Close this search box.
சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்த இலங்கையர்கள் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக கூறப்படும் இலங்கையர்கள் இருவர் இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி கம்பிப்பாடு தெற்கு கடற்கரை பகுதியில் இலங்கை புத்தளம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் வந்திறங்கியதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இராமேஸ்வரம் மரைன் பொலிஸார் இருவரையும் பிடித்து மண்டபம் மரைன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர்கள் இருவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக அகதிகளாக தமிழகத்திற்குள் தஞ்சமடைய வந்தார்களா அல்லது கடத்தல் சம்பவங்களில் தொடர்புடையவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Sharing is caring

More News