Search
Close this search box.
போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு தேரர்கள்

கம்பஹா தொடருந்து  நிலையத்தில் பொது மலசலக் கூடத்திற்கு அருகில் போதைப்பொருளுடன் இரண்டு தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கணேமுல்ல பிரதேசத்தில் உள்ள விகாரையொன்றில் வசிக்கும் 20 மற்றும் 25 வயதுடைய இரண்டு தேரர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கொழும்பு பிரதேசத்தில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்று வருவதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளன.

இந்நிலையில் சந்தேக நபர்களின் பயணப் பொதிகளிலிருந்து 220 மில்லி கிராம் கஞ்சா போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபர்களை கம்பஹா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring

More News