ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு கட்டாயமாக நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் நடைபெற்ற பயிற்சி நிகழ்வொன்றின் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஒன்றை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகவே இருக்கிறது.
இந்த வருடம் செப்டம்பர் 16 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கும் இடையே ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான சட்ட அதிகாரம் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் 2019ஆம் ஆண்டு நடைபெற்றதால் இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.