Search
Close this search box.
இலங்கைக்கு உதவியளிக்க சீனா எப்போதும் தயார்

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா எப்போதும் உதவுவதைப் போன்று கடன் விடயத்திலும் சீனா தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் லின் ஜியான்( Lin Jian) தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சீனத் தலைநகர் பீஜிங்கில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பில் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது பேச்சாளர்  சீனாவின் நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் சமூகப் பொருளாதார அபிவிருத்திக்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது

அத்துடன் இலங்கையின் கடன் நிலைத்தன்மைக்கு ஆதரவளிக்க தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்ற சீனா தயாராகவே உள்ளது என்றும் லின் ஜியான் குறிப்பிட்டுள்ளார்.

Sharing is caring

More News