அனுராதபுரம் கலாவெவ அணையை உடைத்து புதையல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அழைப்பாளர் நாமல் கருணாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
பொறுப்பான அதிகாரிகளின் கண்களில் படாத வகையில் இந்த அகழ்வுகள் புத்திசாலித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.
கலாவெவ பிரதான அணைக்கட்டு புனரமைப்பதற்காக அகழ்வு நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உரிய அதிகாரிகளிடம் வினவிய போது தமக்கு எனவும் தெரியாது எனவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
அங்கிருந்த மிகவும் பெறுமதியான புதையல்கள் எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.