Search
Close this search box.
தைவானுக்கு கோடிக்கணக்கில் பெறுமதியான ஆயுதங்கள் : அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு

தைவானுக்கு (Taiwan) ரூபாய் 3,000 கோடி மதிப்பிலான வெடிபொருள் பொருத்தப்பட்ட ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தளபாடங்களை விற்பனை செய்ய அமெரிக்கா (America) முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாகக் கருதிவரும் சீனாவிற்கும் (China) மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே இந்த விவகாரத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில், குறித்த முடிவை தைவான் அதிபர் லாய் சிங் டே (Lai Ching Te) வரவேற்றுள்ளதுடன் இராணுவ தளபாட கொள்முதல் மூலமும் மற்றும் தங்கள் சொந்த முயற்சி மூலமும் தைவானின் இராணுவ வலிமையை தொடர்ந்து மேம்படுத்தவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆயுத விற்பனையால் பிராந்தியத்தில் இராணுவச் சமநிலை பாதிக்கப்படாது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News