Search
Close this search box.
வானில் மிதக்கும் மர்மப்பொருட்கள்: இலங்கைத்தீவில் மற்றுமொரு சுனாமி?

வடமாகாணம் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை (18) திடீர் நிலஅதிர்வு பதிவானதையடுத்து அன்றைய தினம் முதல் வானில் இரண்டு மர்மப்பொருட்கள் காணப்படுவதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

நீல நிறத்தில் இருக்கும் இந்த இரண்டு மர்மப் பொருட்களும் வானத்தில் மெதுவாக மிதந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

நில அதிர்வின் பின்னரே இந்த மர்மபொருட்கள் வானில் தோன்றியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

வானத்தில் மெதுவாக மிதக்கும் அந்த இரண்டு பொருட்களும் நீல நிறத்தில் மிகவும் பிரகாசமாக காணப்படுவதாக தெரிவித்த மீனவர்கள் கடலிலிருந்து பார்க்கும் பொழுது அவை நன்றாக காட்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இலங்கைத்தீவில் சுனாமி ஏற்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் இதேபோன்ற பல மர்ம பொருட்கள் வானில் மிதந்ததாகவும் அவை சுனாமியின் பின்னர் காணாமற் போனதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் இந்த அறிக்கையின் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக புவியியல் பிரிவுக்கும் இதே தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதற்கான விபரங்கள் கொழும்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் யாழ்.பல்கலைக்கழக புவியியல் துறை விரிவுரையாளர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News